
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் திரேசம்மா அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்ரின் கிறிஸ்தோப்பர்(அருமை) இன்னேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், பிரான்சிஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசநாயகம்(இராசு) அவர்களின் அன்பு மனைவியும்,
றாஜி, லக்சி, பிறின்சன், விஜியன்(சின்னாகுட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற றீற்ரா(புஸ்பம்), கிறேஸ்(பிரான்ஸ்), ஜசிந்தா (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பெல்சி, யேசுதாசன்(கொத்தலா) ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கென்றி(குணம்), சுவாம்பிள்ளை மற்றும் செபஸ்ரியாம்பிள்ளை(பிரான்ஸ்), வில்வரசிங்கம், அருமைநாயகம், அமிர்தநாயகம், றாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றொபேட், வினோ, ஜெனோ, றஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொஜின், அகேனன், ஓவியா, றதீஸ் சைனு, விது, விஸ்ணு, சஞ்சய், சஜின், அஸ்வின், றொஸ்வின், சாருஜா, தபித்தா, ஜோஸ்வா ஆகியோரின் அன்புமிகு பேத்தியும்,
அக்சரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்ளுகின்றோம்.