யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி முடக்காடு, கனடா Scarborough, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சண்முகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கண்ணீர்அஞ்சலி -------------------------------- கணீர் என்ற குரல் நிலவைப் போன்ற முகம் காலைச்சூரியனை ஒத்த புன்னகை எவ்வேளையிலும் காந்தப்புலம் போன்ற பேச்சு அழைக்கும் குரலில் அன்பின் வேர் பண்பில்...