
திதி:05/01/2025
மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா திருநாவுக்கரசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரிலும் மேலான எம் அன்பான அம்மாவே,
நீங்கள் இவ் உலகினை விட்டுச் சென்று 10வருடங்கள் ஓடியதே…
ஆனாலும் அதனைக் கணக்கிட முடியவில்லையே,
காரணம், நீங்கள் எம்மிடம் விட்டுச் சென்ற அத்தனை அன்பான,
ஆழமான நினைவுகளுடன்,
நீங்களும் எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் அம்மா இருக்கின்றீர்கள்…
நாம் உங்களுடன் கதைப்பது
உங்களுக்குப் புரிகின்றதா அம்மா…!!!
இவ்வுலகில் எம் இதயத்துடிப்பு இருக்கும்
வரை எம்முடனே வாழ்வீர்கள் அம்மா……
உங்கள் குரல் இப்போது எமக்குகேட்கா விட்டாலும்,
உங்கள் முகத்தைப் பார்க்க முடியாது போனாலும்,
எம்முடன், நீங்கள் வாழ்ந்த அந்த இனிமையான
நினைவுகள் எம்மிடம் எம் உயிர் உள்ள வரை
அனைத்தும் உயிரானவையே எங்கள் அம்மாவே…
உங்கள் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம் ……
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
உங்கள் பிரிவால் துயருட்டிருக்கும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
??????????????????ஆழ்ந்த இதய அஞ்சலிகள் அம்மா ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????ஓம் சாந்தி. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி…????????