யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மணல்தரை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சண்முகநாதன் அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலநாயகி, வள்ளிநாயகி, நந்தகோபாலன், துளசிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராஜா, ஸ்ரீமுருகன், நித்தியா, மீரஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், பொன்மணி, அருளம்மா, கந்தசாமி, மற்றும் தவவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, நாகரத்தினம், கணேசன், சின்னராசா, தனபாக்கியவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுரா, கஜீவன், சுஜித்தா, சரவணன், ஜெயனி, கிருஜன், சரண்யா, சரிஜா, திவ்வியன், பிரியங்கன், விதிஷ்ஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கீரன், ரூபன், தனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 09:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.