10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசம்மா இலட்சுமணர்
வயது 83
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:27/01/2025
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும், சுதுமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா இலட்சுமணர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே!
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா!
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள்
நனைந்த காடாய் கிடக்கின்றன!
உங்களைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை
உங்கள் அன்பிற்கு இணை யாருமில்லை
உங்கள் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது..
அம்மா நாம் மறக்கவில்லை
உங்களை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
தகவல்:
ராணி (மகள்)- நேசன்(மருமகன்) லண்டன் மற்றும் குடும்பத்தினர்.
Ammamma, it’s been 10 years, but I still feel your love around me. I miss your warmth, your smile, and your guidance. Thank you for everything you gave me??❣️I carry you in my heart always.? I...