யாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசமணி நடராஜா அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசமாணிக்கம், சின்னம்மா கைலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவனம் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ் நடராஜா(Mega Financial Group அதிபர்), இரஞ்சினி வேலுப்பிள்ளை(ரதி) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
மணி வேலுப்பிள்ளை(மொழிபெயர்ப்பாளர்), தமாரா இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி(லண்டன்) மற்றும் காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம், சுப்ரமணியம், இரத்தினம் ஆகியோரினதும், காலஞ்சென்றவர்களான புஷ்பராணி இராசதுரை, செல்லய்யா கனகசபை ஆகியோரினதும் அன்பு மைத்துனியும்,
ஹவீனா மற்றும் காலஞ்சென்ற மகிந்தன் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
சுதேசன், சுபேந்திரன், சுபானந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராகவன், உமாலினி, சுபோதினி ஆகியோரின் பெரிய மாமியாரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Jan 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 07 Jan 2024 10:30 AM - 12:00 PM
- Sunday, 07 Jan 2024 12:00 PM
- Sunday, 07 Jan 2024 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details