
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட ராசமலர் கனகசிங்கம் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்ரன் அபிவாசகம், லில்லி ராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
கனகசிங்கம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா(ஜேர்மனி), மதி(நெதர்லாந்து), சேரன்(அவுஸ்திரேலியா), ஜெயா(லண்டன்), சேயோன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரபால்(கனடா), சாந்தமலர்(மல்லிகா), காலஞ்சென்ற ராஜபால்(ராசன்), செல்வி, தேவகுமார்(தேவா) ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
ஈஸ்வரி(கனடா), லக்கி, மஞ்சுளா(கனடா), மஹேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரமோகன்(ஜேர்மனி), சிறி(நெதர்லாந்து), ஸ்டெலா(அவுஸ்திரேலியா), நிலானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்வீற்றா(ஜேர்மனி), டெலோன்(ஜேர்மனி), ஷனா(நெதர்லாந்து), அஷோக்(நெதர்லாந்து), அஜீபா(லண்டன்), அர்ஷன்(லண்டன்), அஜீட்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஏரன்(அவுஸ்திரேலியா), ஜெரன்(அவுஸ்திரேலியா), பியங்கா(கனடா), இஷானா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
றீனா(ஜேர்மனி) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 06-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கிறிஸ்தவ, இந்து ஆராதனைகளின் பின் பி.ப 03:00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாஸ்டர்..மலர் ஆன்ரி ஆத்ம சாந்திக்கு பிரார்த்கி றோம். மணி அக்கா மாங்கோ..(Rani)