நினைவாஞ்சலி - ஒரு தூரத்து துயரப் பார்வை! எப்பொழுதும் மறக்கமுடியாத புன்சிரிப்பு நின் திருமுகத்தில் தவழும், நேர்மையை எடுத்து இயம்பும் மனது நின் வாய்ச்சொல்லில் கமழும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அன்பான சுபாபம் நின் இதயத்தில் திகழும் , இவைதான் உன் பள்ளிக்கூட நாட்களில் நான் கண்டவை திருமதி இராசலட்சுமி சிவயோகநாதன். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று எம்மை எல்லாம் கயிற்றசிட்டி கந்தனிடம் வரிசையாக ஓவ்வொரு வெள்ளியும் பாடசாலையில் இருந்து சிவபாக்கியம் அக்காவுடன் அழைத்து செல்வதை என் மனக்கண்ணில் இப்போதும் காண்கிறேன். அதே பாடசாலையில் திருநீற்று கோலத்துடன் 2012ம் ஆண்டில் எனது சக மாணவி தவத்துடன் வந்து என்னை ஆச்சரியமடைய செய்தது இன்றும் பசுமையாக காண்கிறேன். இறைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் நீவிர் இறுதிவரை ஒட்டாவா சிவன் ஆலயத்திலும் முதியோர் தமிழ் சங்கத்திலும் தொடர்ந்தது எம்மை மேலும் மகிழ்விக்கின்றது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் - உங்கள் மகத்தான சேவை மரணத்தின் பின்பும் சிவனாரை மகிழ்விக்கும் என்பதில் ஐயமே இல்லை. உங்கள் ஆத்ம சந்திக்கு என்றும் கயிற்றசிட்டி கந்தனிடம் வேண்டுகின்றோம்!
I love ammamma. I miss you ammmamma - Luxme ??