யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சிறாம்பியடியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், மலர்மாலைகள் அனிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 10-09-2024 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். பின்னர், 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா கந்தசாமி கோயில் 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5, Canada எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
we lost our kind mum