கண்ணீர் அஞ்சலி

அமரர் இராசலட்சுமி அருணகிரிநாதன்
வயது 73

அமரர் இராசலட்சுமி அருணகிரிநாதன்
1946 -
2020
கொல்லன்கலட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கிறீன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலட்சுமி அருணகிரிநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், அருணகிரிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கீதாஞ்சலி, புஷ்பலதா, அருள்குமார், ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
வளமான வாழ்வு தந்து
வாழ்விற்கு ஒளி தந்து
தேசம் புகழும் நிலை பெற்று
பாசத்துடன் எங்களை வளர்த்து
நீங்காத நினைவுகளை
நிழலாட வைத்துவிட்டு
நேசம் கொண்ட சொந்தங்களை
பாதியிலே தவிக்கவைத்து
தொலைதூரம் சென்றதேன்….
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்ட அன்புத் தெய்வத்திற்கு
எமது கண்ணீர் அஞ்சலிகள்...
தகவல்:
குடும்பத்தினர்