
கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசலட்சுமி இராசேந்திரம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
அம்மா!!!
நாட்கள் நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது
உங்களின் நினைவு
நினைக்கும்போதெல்லாம் நிலைகுலைந்து
போகின்றோம் அம்மா...
எங்களை ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
நீங்கள் மீளாத் துயிலில் சென்றீர்களே அம்மா...
அம்மா!!!
காலனவன் கொடூரமாய்
மனித உருவில் வந்தானோ?
பூப் போன்ற எங்கள் அன்னையை
கொடூரமாய் கொன்றானோ??
உயிர் போகயிலே
என்னம்மா நினைத்தீர்கள்???
எங்கள் தெய்வத்திற்க்கு
எப்படியெல்லாம் வலித்தி௫க்கும்???
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட
மனிதனை நினைத்து
அன்பினால், பண்பினால்,
நட்பினால், ஆளூமையினால்
எங்களை ஆண்டீர்களே!!!
எங்கள் உள்ளங்களில்
குடியிருக்கும் அன்னையை
என்றும் மறவோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
எமது குடும்பத் தலைவி இராசலட்சுமி இராசேந்திரம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரியைகள் 09-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
இல. 71,
குமரபுரம்,
பரந்தன்,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details