Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 03 DEC 1944
விண்ணில் 17 MAR 2024
அமரர் இராசகுமாரி கந்தசாமி 1944 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுமாரி கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு போனாலும்!
அழியாது நம் துயரம் மறையாது
 உங்கள் நினைவு!

எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
 புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
 எம் மனம் கலங்குகிறது...

 கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அம்மா!
 இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது 
அம்மா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
 என ஏங்கித் தவிக்கிறோம் 
அம்மா...
 ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்..!

தகவல்: குடும்பத்தினர்