4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசையா இராஜேந்திரா
(Retired Nursing Administrative Officer- யாழ் போதனா வைத்தியசாலை)
வயது 86
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராஜேந்திரா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
நான்காண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
பாசத்தின் முழு உருவம் என் அப்பா
எங்களை விட்டு ஏன் போனீர்கள்?
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த
நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி
நனைக்குதப்பா!
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம் !
உங்கள் பிரிவால் துயருடன்
வாழும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்