யாழ். அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மாட்டீன் திரேசம்மா அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அச்சுநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, றோசப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அச்சுநகரைச் சேர்ந்த இராசையா எலிசமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா மாட்டீன் அவர்களின் பாசமிகு துணைவியும்,
யோசேப், ஸ்ரனிஸ்லஸ், பயஸ், அனற்றா, அலோசியஸ், வரோணா, சந்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றஞ்சி, வசந்தி, கிதா, றமேஸ், சுசி, செல்வேந்திரன், றோய் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லத்துரை, தாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணியளவில் அச்சுவேலி புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்..
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.