-
24 NOV 2019 (N/A age)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மூத்தவிநாயகர் கோவிலடி, Sri Lanka
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இராசையா செல்லக்கண்டு அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, கலாநிதி கிருஷ்ணராஜா, யோகேஸ்வரி, பாலகிருஷ்ணன்(கட்டிட திணைக்களம், திருகோணமலை), வைத்திய கலாநிதி பாஸ்கரன்(சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கவடிவேல், காலஞ்சென்ற கலாநிதி பத்மினி, இரகுபதிராஜா, சூரியகலா(ஆசிரியர் - அல் ஹீசேனியா பாடசாலை), வைத்திய கலாநிதி ஜெயலக்ஷ்மி(சித்த ஆயுர்வேத வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஸ்மன், றிபோஷிகா, சுலேஸ்மன், ஹம்சத்வனி, சதீஸ், விஷ்ணுபிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 25-11-2019 திங்கட்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.