கிளிநொச்சி கரைச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், புளியம்பொக்கணையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சிவராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 ஆகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து
போகும் ஆனால்
கண்மணியே அப்பா
உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த
கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 31 நாடகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 13-09-2023 புதன்கிழமை காலை 6.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியக்கிரியைகள் 15.09.2023 வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
ஆழ்ந்த அனுதாபங.கள் போய் வாருங்கள் uncle நன்றியுடன் பிரசன்னா