
யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்கிசையை(Mount Lavinia) வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரரும், வசாவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற வன்னியசிங்கம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மதிவதனி, ஆதித்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷாந்தி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற இராஜசேகர், சந்திரவதனா, மணிவண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலவதனி, குலேந்திரன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன், ராஜினிதேவி, பாஸ்கரன், ருக்மணி, காலஞ்சென்ற பத்மதேவன், லதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-11-2023 புதன்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Sending our heartfelt condolences! ??