Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 FEB 1947
இறப்பு 18 APR 2013
அமரர் இராசையா கந்தசாமி
வயது 66
அமரர் இராசையா கந்தசாமி 1947 - 2013 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், இல 482 திருநாவற்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது...

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து மொத்தமாய்
எங்களை மோசம் செய்ததென்ன?

கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்

பத்து ஆண்டு என்றாலும்
பல ஆண்டு சென்றாலும்
உன் பிரிவை ஏற்கவில்லை எங்கள் மனம்
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்

மனைவி: மனோரஞ்சிதம்(கனடா)
பிள்ளைகள்: மோகன்(மகன் - இலங்கை), வத்சலா கிருஸ்ணராஜ்(மகள் -லண்டன்), வசந்தரோகினி யோகராஜா(மகள் - இலங்கை),
யசோதா ஈஸ்வரானந்தம்(மகள் -கனடா), கவிதா சிவானந்தம்(மகள் - ஜேர்மனி)
பேரப்பிள்ளைகள்: விதுஷா, மிது, விமல், தர்மிகன், சூர்யா, மேகா, அனிவா, வினோஜ், கீர்த்துஷா, நேகா

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices