
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கனகாம்பரம் அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தி(அவுஸ்திரேலியா), சஞ்சளா(ஆசிரியை- அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை), வினோதினி(அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜமுகன்(அவுஸ்திரேலியா), கருணாகரன்(ஆசிரியர்- அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி), சதீஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகாம்பிகை(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பூபாலசிங்கம்(ஓய்வுநிலை அதிபர்), காலஞ்சென்ற குலநாயகம், இராசரத்தினம், பாலாம்பிகை, சரஸ்வதி, சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துர்க்கா(அவுஸ்திரேலியா), தாருகா(அவுஸ்திரேலியா), சப்தவி, சகிஷன், ஆரண்(அவுஸ்திரேலியா), எழினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.