
கந்தரோடை மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசா மயில்வாகனம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து போனாலும் அழியாது
நம் சோகம் மீளாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
உயிரூட்டி வளர்த்த உங்களை
எம் உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து அறிவைத் தந்து
எம்மை இவ்வுலகில்
பெருமையோடு
வாழ வைத்த
எம் அன்புத் தந்தையே!
ஆண்டுகள் ஓடிவிடும்
மாண்டவர் மீள்வதில்லை
ஆனாலும் எம்மை இடர் நீக்கி
வாழ வைத்த உங்கள் நினைவு
சுடராய் எம் மனதில் ஒளிர்ந்து நிற்கும்
கடந்தகாலம் எக்காலத்திலும்
திரும்பி
வரப்போவதில்லை
ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து
மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற
ஞாபகங்கள்
எமக்கு தினமும்
கண்முன் நிறுத்தும்.
உயிரூட்டி வளர்த்தீர்கள்
எங்கள்
உள்ளத்தில்
உயிர் உள்ளவரை வாழ்வீர்கள்!
பத்து ஆண்டுகள் என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!