யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசா கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 25/01/2025
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!