ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரஞ்சிதமலர் சுவாமிநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 10 சென்றாலும் அம்மா!
அன்புருவம் மறைந்து போகுமோ?
ஆண்டவனைக் கண்டதில்லைத் தாயே!
அன்பு முகத்திற் கண்டோம் அவனொளியை!
வேண்டிய தெல்லாம் தந்து வளர்த்த தாயே!
அம்மா!
உன் தீட்சன்ய பார்வை!
தெறிக்கவிடும் தமிழ் வார்த்தைகள்
எதற்கும் அஞ்சா எஃகு உள்ளம்...
வற்றா கருணை இதயம்!
வேண்டும் எமக்கும் வேண்டும்
இன்னும் வேண்டும்
சோரும்போது உன் ஆறுதல்
துவளும்போது உன் தாங்குதல்
பசிக்கும்போது உன் உணவு
தூங்கும்போது உன் தாலாட்டு
ஆண்டுகள் கடந்தாலும் என்றும் எம்மோடு நீ
நீங்கள் வாழ்கிறாயே!
உதிரமாக எம் உதிரத்திலே!
மீண்டும் தாயாகப் பிறந்து வாராயோ?
உன் அன்பு வதனம் பார்த்து நாம் மகிழவேண்டும்
ஆண்டு 10 கடந்தாலென்ன?
கனத்துக்கு கனம் நாமிருப்போம்!
உந்தன் நினைவுகளுடனே!
காயமதை அழித்து நீ கரந்து வாழ்கையில் ஊனக்
கண்முன்னே எம்முன் தோன்றுவாய் நிதமும்...!!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..