Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 JUN 1956
மறைவு 23 JAN 2021
அமரர் ரஞ்சனாதேவி பாலேந்திரன்
ஓய்வுபெற்ற முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி- சுன்னாகம்
வயது 64
அமரர் ரஞ்சனாதேவி பாலேந்திரன் 1956 - 2021 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இணுவில் கிழக்கு கொக்கன்வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சனாதேவி பாலேந்திரன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதபிள்ளை  இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்  பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலேந்திரன்(ஓய்வுபெற்ற பிரதியதிபர்- இராமநாதன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. கார்த்திகா, ஜனகன்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மருமகளும்,  

மகேஸ்வரி அவர்களின் அன்பு பெறாமகளும்,

காலஞ்சென்ற இராசமனோகரன். தேவமனோகரன், இராசதேவி, இராசமலர், சுலோசனா, கிருபாகரன், செல்வாகரன், ஐங்கரன், திருக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெய்வநாயகி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பாஸ்கரன், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், காலஞ்சென்ற பராசக்தி, விமலாதேவி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஸ்ரீபதி, துஷ்யந்தி, பரமா, உதயகுமார், யுவராஜ், மதுரா, ரஜிதா, சந்திரிகா, புகழினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனு, அனந்தன், பானு, பாரி, ஜதுர்ஷா, விக்னேஷ், ஹரிஷ், ஹரிணி, கேதுசன், கேதுசா, தனுஜா, ரமணன், யாழினி, விசாகன், பாலினி ஆகியோரின் பெரியம்மாவும்,

செந்துாரன் றாஜினி(அகிலாஷ்), கஸ்தூரி சிவாதரன்(அபிஷயன் அகரன்), சர்மிலன், சாமந்தி, மாதுமை, ஜயபவன், சயான், கிரிஷான், மதுஷான், சேயோன், ரணேஷ், சீரோன், சுவாதி, சரிகா, அவந்திகா, யுவந்திகா. சுபிக் ஷா, அபிக் ஷா, அதிரன் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2021 திங்கட்கிழமை அன்று  மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்