Clicky

பிறப்பு 05 MAR 1952
இறப்பு 05 SEP 2020
அமரர் ராணி சிவபாலன்
வயது 68
அமரர் ராணி சிவபாலன் 1952 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
05 MAR 1952 - 05 SEP 2020
Late Rani Sivapalan
அம்மா உங்கள் அன்பை எங்களால் எப்போதும் மறக்க முடியாது. எப்பொழுதும் தலை நிமிர்ந்து கம்பீரமாய் நின்று உன் குடும்பத்தை தாங்கினாய். வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள் வந்ததாலும் அத்தனையும் வென்று நின்றாய் அரசியே, ஊரில் எங்களின் பெயர் *ராணியின்* பிள்ளைகள், ஊரே போற்றும்படி ஒரு கொடை வள்ளலாய் இருந்தாய் அம்மா. உங்கள் சொந்த பிள்ளைகளை விட அதிக பரிவு பாசம் அனைவருக்கும் தந்தாயே தாயே. எமக்கு வயதானாலும் உங்கள் கரங்களினாலேயே உணவு ஊட்டுவாய் - இப்படி நீங்கள் உறங்குவதை பார்க்க எம் மனம் வேதனையில் வெந்து தவிக்கிறது அம்மா .. எழுந்து வா அம்மா... எங்கள்மனவோட்டத்தினில் கேள்விகள் பல , காலம் தான் பதில் சொல்லும். அம்மா, ஒவ்வொரு இரவும் பொழுதும் உங்கள் நினைவுகள் படமாய் மனதினில் ஓடுகின்றன. எப்போதும் எங்கள் மனதில் குடியிருக்கும் எங்கள் குல தெய்வமே, உங்கள் பாதையை நாம் என்றுமே தொடர்வோம் வார்த்தைகள் இன்றி தவிக்கும். உன் பிள்ளைகள்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Sep, 2020
நன்றி நவிலல் Sat, 03 Oct, 2020