யாழ். வைமன் றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வதிவிடமாகவும் கொண்ட தர்மானந்தன் ராமசாமி அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசாமி நீலாம்பிகை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற ரூத் வள்ளியம்மை(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சித்குமார்(பிரித்தானியா), சதீஸ்குமார்(பிரித்தானியா), நந்தகுமார்(பிரித்தானியா), ராம்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சித்தானந்தன் மற்றும் மகேசானந்தன், யோகானந்தன், நற்குணராசா, புவனாம்பிகை, தயானந்தன், யோகாம்பிகை, வனிதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மெர்லின், மிருலாயினி, சசிரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோசுவா, ஸ்ரபான், பவித்திரன், காயத்திரி, ஆடம்திமோத்தியு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-06-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.