10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமசாமி சரவணமுத்து
RS- பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஓய்வுப்பெற்ற உத்தியோகத்தர், பூநகரி தெங்குறுபிட்டி அருள்மிகு பெரும்படை அம்மன் திருக்கோயில் உரிமையாளர், பூசகர்
வயது 81
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பூநகரி மட்டுவில் நாடு மேற்கு கள்ளிப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பூநகரி சித்தங்குறிச்சியை(தமிழகம்) வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமசாமி சரவணமுத்து அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
பத்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எங்கள் அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
இப்போ நம்மோடு நீர் இல்லையே!
போகும் இடமெல்லாம் உன் நினைவே... !
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்