Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 SEP 1943
இறப்பு 28 MAR 2011
அமரர் இராமநாதன் புஸ்பராஜலிங்கம்
வயது 67
அமரர் இராமநாதன் புஸ்பராஜலிங்கம் 1943 - 2011 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவிலை பிறப்பிடமாகவும், இணுவில் தியேட்டர் லேனை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் புஸ்பராஜலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமனே எங்கள் அன்புத் தெய்வமே!

ஒரு மலராய் மலர்ந்து
 பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices