
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், ஜெயந்திநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் நாகமுத்து அவர்கள் 27-07-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
முத்தையா, பேரம்பலம், மகேசபிள்ளை(ஜேர்மனி), காமலாவதி, புவனேஸ்வரி(பிரான்ஸ்), சோதிமணி, தனலட்சுமி, சுதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகம்மா, புவனேஸ்வரி, மகேஸ்வரி(ஜேர்மனி), இராசரத்தினம், சச்சிதானந்தம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேந்திரன், ஜெயகாந்தன், மாலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஜெயந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.