யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமநாதன் அமரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆண்டொன்று நாளொன்று போல் ஓடி
மறைந்தது ஐயா!
பாரினிலே உங்கள் முகம் ஒரு முறை பாரோமா
என எங்கள் விழிகள் ஏங்கி தவிக்கின்றது ஐயா!
கள்ளமற்ற உங்கள் மனமும் களங்கமற்ற
உங்கள் அன்பையும் உதட்டோரம்
உதிர்க்கும் உங்கள் புன்னகையையும் காணாது
வாடி நிற்கின்றோம் ஐயா!
எங்களை ஏணி போல் நின்று ஏற்றி விட்டு
நீங்கள் எட்டாத தூரம் சென்றேதேனோ ஐயா!
உறைந்து போனோம் உங்கள் பிரிவால்
தளர்ந்து போனோம் ஐயா!
மறைந்து விட்டீர்கள் எங்கள் மனங்களில்
நீங்கள் நிறைந்து விட்டீர்கள் ஐயா!
உங்கள் ஆத்மா ஆண்டவன் பாதம் சென்று நிலையான
அமைதியும் சாந்தியும் பெறட்டும் ஐயா!
ஓம் சாந்தி... ஓம் சாந்தி.. ஓம் சாந்தி...
உங்கள் பிரிவு துயருடன் உங்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டி நிற்கும் குடும்பத்தினர்....
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட இராமநாதன் அமரசிங்கம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Anna amarasingam avargal marivu seithy kedu varthukeran alith anuthapaingal thrivithu kolkeran Vairamuthu muthulingam france