கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட ராமன் பாலகிருஷ்ணன்(பாலா) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்று ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை
உங்கள் இழப்பை
எம் கண்களில்
ஈரம் நிரந்தரமானதோ என்னவோ...
பாதி வழிதனிலே விதி வந்து பிரித்ததுவோ
பரிதவித்து நிற்கின்றேன்
விரைந்தோடி வருவீர்களோ!
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள்
உம்மை தேட
எம் மனமோ
உங்களின் அன்புக்காய்
ஏங்கித் தவிக்கிறதே!
பாவிகள் நாங்கள் உங்கள் நினைவில்
பரிதவித்து நிற்கின்றோம் இன்று...
ஆறாத காயமாக நின் மாய மறைவு- எம்
மனதை மீளாத துயரத்துடன்
உறவுகள் நாம் உம்மை
எண்ணி ஏங்குகின்றோம்!!
உங்கள் நினைவோடு வாழ்ந்து
கொண்டிருக்கும் குடும்பத்தினர்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.