யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தியாகராசா அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுபாசினி (அவுஸ்திரேலியா), துஸ்யந்தன் (கனடா), சுதாசினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஸ்ணகுமார், குகநேசன் ஆகியோரின் மாமனாரும்,
தனுக்சிகா, திரிசான், கனிஷா, லெனின், லவிதன், லதுஷா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திலகவதி, கனகலிங்கம், பரமலிங்கம், பத்மாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற லோகநாதன் மற்றும் தயாநிதி, புஸ்பநிதி, புஸ்பநாதன், நகுலநாதன், ஞானம்மா, அகிலேஸ்வரி காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், சதாசிவம், சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
ராஜேஸ்வரி, சச்சிதானந்தம், பரமநாதன், ஜனனி பிரியதர்சினி, சிவகலா ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-06-2026 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் "கலாநிதி வாசா", புங்குடுதீவு முதலாம் வட்டார அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் புங்குடுதீவு, மணற்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our deep condolence, my dear anna was our negibour, he helped all the time what we needed, my amma and my brothers are grateful to you.