யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25/01/2023
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - எம் தந்தையே!
நிழல் போல இருந்த நீங்கள் எங்கள் நினைவாய் மாறினீர்கள்.
அதிகாலை வேளையிலே கதிரவன் வ௫ம்முன்னே
ஆண்டவனிடம் சென்று ஆண்டொன்று ஆனதுவோ!
கண் இமைக்கும் நேரத்தில் எங்களை கண்ணீர் துளியாக்கினீர்கள்.
உங்கள் கம்பிரமும், சிரித்த முகமும் கண்டு ஓராண்டு ஓடி விட்டது!
ஒவ்வொரு நொடியும் எம் உயர்வுக்கு இறுதிவரை உழைத்தீர்களே அப்பா!
கண்ணின் இமையாக காத்தவரே….. ஏணியாக நின்று எம்மை ஏற்றி விட்டவரே.....
தோணியாக நின்று துறைமுகம் கட்டியவரே.....
உங்கள் இழப்பு யாரும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்.
என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து உங்கள் வழியில் நாம் என்றும் பயணிப்போம்!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்கள் நெஞ்சங்களை விட்டு
என்றும் அழியாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
என்றும் மறவாத உங்கள் நினைவுகளுடன்
உங்களை நினைவு கூறும்,
மனைவி, பிள்ளைகள்,
சகோதரா்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
Sorry to hear your loss Rest in peace