மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1938
இறப்பு 05 MAY 2021
திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை
ஓய்வுபெற்ற மின்பொறியியலாளர்
வயது 82
திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை 1938 - 2021 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா ராமலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சனாதனன், சனந்தனன், சனகன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

சந்திரிக்கா, சுகன்யா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரன், அயன், அனிக்கா, அபிரா, சேயோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos