

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குமாரசாமிபுரம் 12ம் கட்டை விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கதிரவேற்பிள்ளை அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று விசுவமடுவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பராசக்தி, சதாசிவம்பிள்ளை, சிவக்கொழுந்து, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலையரசி, கலைவண்ணன், வைதேகி, காலஞ்சென்ற ஜெயகாந்தன் மற்றும் உமாமகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலகிருஸ்ணன், அனுஜா, ராஜ்குமார், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவனிகா, தனுஷான், தனஞ்சன், தர்ணிகா, யோதிகா, லோஜிகா, நிசாந்தன், ஆஷவி, ஆஹவி, ஆரன்(பிரனீத்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பொன்னையா, இரத்தினாம்பிகை, அருளானந்தம், காலஞ்சென்ற கோமலர், கந்தசாமி, மகாலட்சுமி, மகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசநாதன், அமிர்தலிங்கம், காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற மதிவதனி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் இறுதிக்கிரியை செய்யப்பட்டு, மு.ப 08:00 மணியளவில் அவரது தற்காலிக வதிவிடமான விசுவமடுவிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு அவரது பிறப்பிடமான வேலணையில் உள்ள அவரது இல்லத்தில் பி.ப 01:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் வீரன் பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்