Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUL 1936
இறப்பு 28 JUL 2018
அமரர் இராமலிங்கம் கனகலிங்கம்
வயது 82
அமரர் இராமலிங்கம் கனகலிங்கம் 1936 - 2018 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Grandpass ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் கனகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.  

விழிநீரை துடைக்க விரல் ஒன்று இருந்தது அன்று
எட்டு ஆண்டுகள் கழிந்தது இன்று
இதயம் கருகி இமைகள் நனைகிறது
உங்கள் பிரிவினிலே...

எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே!
என கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி
தெரியாத் தூரம் விரைந்தோடி சென்றதேனோ!

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

நீங்கள் எமக்கு வழிகாட்டியாய்
எங்கள் இதயத்திலேயே வாழ்கிறீர்கள் அப்பா!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute