யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 46/1 அம்மன் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத் தலைவன்
புங்கை
நகரில் பூத்த புதல்வனே
புன் முறுவலுடன் வலம் வந்த பூமகனே
பாசத்தின் இருப்பிடமாய் இருந்த பண்பாளனே
வையகம் வாழ்த்திட வாழ்ந்த மன்னனே
கட்டியவளை கண்மனியாய் பார்த்த மணவாளனே
பிள்ளைகளைப் பண்பாக்கிய பற்றாளனே
பேரப்பிள்ளைகளைக் கட்டியணைத்த பாக்கியவானே
உற்றாரை அரவணைத்த உத்தமனே
நண்பர்களுடன் நல்லுறவாடிய நற்பாளனே
பூவோலகம் விட்டு எவ்வுலகம் சென்றீர் அப்பா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முகவரி:
46/1, அம்மன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்
May his Soul Rest in Peace 🙏