திதி:10/07/2026
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராமையா தர்ஷீலன்
அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களைத் தேடி உங்கள் மனைவி …
நீங்கள் இல்லாத வீடு
இன்று மௌனமாக இருக்கிறது…
சிரிப்பு சத்தம் கேட்ட இடம்
இப்போது வெறுமையாக இருக்கிறது…
உங்கள் மனைவியாகிய நான்
உங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறேன் …
சின்ன சின்ன நினைவுகளிலே கூட
உங்கள் முகம் தான் வருகிறது…
காலை எழுந்ததும் தேடும் பழக்கம்
இன்னும் மாறவில்லை…
நீங்கள் பேசும் வார்த்தைகள்
இன்னும் மனசுல வாழ்கிறது…
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும்
எம் மனம் உறங்கவில்லை
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால்
நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்!!
நேரம் போகும்… ஆனா
உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை…
என்றும் நினைவில் வைத்திருக்கிறோம்…
ஆழ்ந்த அனுதாபங்கள்!💐 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நீர்வைக்கந்தன் திருவருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏