Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 OCT 1961
இறப்பு 19 OCT 2023
அமரர் ராஜ்குமார் அருணாசலம்
வயது 62
அமரர் ராஜ்குமார் அருணாசலம் 1961 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொக்குவில் நாமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ராஜ்குமார் அருணாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 05-11-2024

ஓர் ஆண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் பாசமுகம் மறைந்து போகுமா!

மண்ணிடமும் மகமாரியிடமும் விடைபெற்று
வந்து மனைவி, மக்கள்,
உற்றார் உறவினரையும் ஏமாற்றிவிட்டு
இறைவன் பொற்பாதம் சரணடைந்து
ஓர் ஆண்டு ஆனதே!

இலவு காத்த கிளியானோம்

பண்பினை ஊட்டி, பாசத்தைப் பொழிந்து
பார்போற்ற வளர்த்த அப்பாவே!
உங்கள் கம்பீரக் குரல் காதில்
ஒலிக்கிறதே மழலை மொழி
தொடக்கம் மந்திரமொழி வரை
உங்கள் வழி மறவாது நடப்போம்
“அப்பா” எப்போ வருவார் கூட்டி
வாருங்கள் நீண்ட நாளாகி விட்டதென
வினவும் பிஞ்சுகளுக்கு என்ன
பதில் சொல்வேன்.

ஆண்டொன்று ஆனாலும்
ஆயுள் மட்டும் உங்கள் நினைவு
என்றும் நிலைக்கும்.

உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்