Clicky

பிறப்பு 20 JUN 1934
இறப்பு 05 JAN 2020
அமரர் இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம்
இராமநாதன் கல்லூரி பழைய மாணவி
வயது 85
அமரர் இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் 1934 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Markham, Ontario 10 JAN 2020 Canada

பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ ரசிக்கும் சீமானே" ...என்ற பாடலை கேட்டவுடன் முதலில் நினைவுக்கு வருவபர் அன்னார் திருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம், எனது துணைவியாரின் பெரியம்மா. நல்லதொரு இனிமையான சுபாவம் கொண்டவர், எப்போதும் சிரித்த முகம். எதையும், நிதானமாக, லவமாக கையாளும் திறமை கொண்டவர். எங்கள் வீட்டில் நடைபெறும் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வதில் அவருக்கு அலாதி பிரியம் பத்து வருடத்துக்கு மேலாக எங்கள் வீட்டு வைபவத்தில் அவர் பாடிய பாடல் தான் ஓ ரசிக்கும் சீமானே ... அன்றிலிருந்து நான் அவரை எந்த வைபவத்தில் கண்டாலும் பாட சொல்லி கேட்க்கும் பாடல் .. நான் விடும் பகிடிகளுக்கு நன்றாக சிரித்து மகிழ்வார். எங்கள் வீட்டுக்கு வந்து அவரின் இளைய சகோதரியின் உடன் இருந்து உணவு சாப்பிடுவது அவருக்கு மிக பிடித்த விடயம் . என் குடும்பம் மேல் மிகவும் அன்பும் அக்கறையும் கொண்டவர். என் அம்மாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றேன். இந்த நேரத்தில் பட்டினத்தார் பாடல் ஓன்று தான் நினைவுக்கு வருகிறது. அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுகமெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இருகைத்தலை மேல்வைத் தழும் மைந்தரும் சுடு காடு மட்டே! பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! பாடலின் _விளக்கம் : Wealth and Relations coming till the home. Women - The wife - with their attractive eyes come till the street. The children who cry keeping their hands on the body come until the cremation grounds. The two things that accompany are the sins and the good deeds that a person does during his life ஓம் நமசிவாய ஓம்