Clicky

பிறப்பு 16 JAN 1942
இறப்பு 24 FEB 2019
அமரர் இராஜேஸ்வரி செல்லத்துரை
வயது 77
அமரர் இராஜேஸ்வரி செல்லத்துரை 1942 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 03 MAR 2019 Sri Lanka

என்மீது மிகவும் நேசம் கொண்ட அன்புத்தாய் இவர். தமிழகத்தின் சென்னையில் வாழ்ந்த காலங்களில் என்னை தன் நெருங்கிய உறவாகவே வரித்துக்கொண்டவர். அவர் கணவரான செல்லத்துரை அங்கிளும் இவரைப்போலவே. வறுமையில் வாடுவோரைக் கண்டால் தேடிச்சென்று ஆதரவளித்து உதவும் தாய்மை உள்ளம் அவரது. " மார்க்கண்டேயர்" என்ற அடைமொழியால் எப்போதும் எனை அழைத்து என்றும் என்னை இளமையாய் காண விரும்பிய அன்புத்தாயின் இழப்பை எப்படி ஜீரணிப்பேன். அன்புத் தாயே ! எப்போதும் கடவுளிடம் எனக்காகவும் பிரார்த்திக்கும் உங்கள் ஆத்மா அவர் பாதக்கமலங்களில் இளைப்பாறியபடி என்னை ஆசீர்வதிக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.