Clicky

தோற்றம் 18 MAR 1930
மறைவு 23 NOV 2022
அமரர் இராஜேஸ்வரி நன்னித்தம்பி
வயது 92
அமரர் இராஜேஸ்வரி நன்னித்தம்பி 1930 - 2022 Kuala Lumpur, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

ஸ்ரீதர் குடும்பம் 03 DEC 2022 United States

உறவு முறையில், அவ பெரியம்மாவாக இருந்தாலும், நான் அவவை எப்போதும் ராசு சின்னம்மா என்று தான் உரிமையோடும் அன்போடும் கூப்பிடுவேன். சிறு வயதில்,வீட்டில் வளரும் காலத்தில், அவவின் ருசியான சாப்பாட்டுக்காக வேலி கடந்து, அவவின் வீட்டு குசினிக்கு ஓடிப்போய் சுட சுட, தோசை, அப்பம், பால்புட்டு சாப்பிட்டது எல்லாம் நினைவுக்கு வந்து போகும். அவ எனக்கு இரண்டாவது அம்மாவாகவே எப்போதும் இருந்தவ, எனது அம்மா உலகை விட்டு பிரிந்த போது. பின்பு, அவ லண்டனில் வாழ தொடங்கியவுடன், அவவுடன், நான் தொலைபேசியில் அடிக்கடி பழைய நினைவுகளை மீட்டி கதைப்பதே சந்தோசம். மூன்று நாட்களுக்கு முன் அவ இறைவனிடம் போவதுக்கு முன்னரும் தொலைபேசி எடுத்தேன், ஆனால் கொரோனாவின் பிடியில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக அறிந்தேன். இறைவன், இன்னொரு சந்தர்ப்பத்தை மீண்டும் எனக்கு கதைக்க தராமல், அவவை விரைவாக தனது காலடியில் அழைத்து விட்டார். உங்கள் ஆத்ம சாந்தி அடைய, இறைவன் நிச்சயமா துணையுடன் இருப்பார், ராசு சின்னம்மா!

Notices

மரண அறிவித்தல் Thu, 01 Dec, 2022
நன்றி நவிலல் Sat, 10 Dec, 2022