யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலச்சந்திரன் பிரசாத் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
எமது தாயாரின் பிரிவுச் செய்தி அறிந்து ஆதரவு வார்த்தைகள் பகிர்ந்ததுடன், இறுதிச் சடங்கிற்கு வருகை தந்து இறுதி மரியாதை செலுத்திய உங்களது பிரசன்னம், மலர்வளையம் அனுப்பியது, மற்றும் எல்லா வழிகளிலும் எங்களுக்கு உதவிகள் பல வழங்கி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்களது மனங்களை இலகுவாக மாற்றவும், எங்களை இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டு வரவும் உங்களது முனைப்பான முயற்சிகளால், எமது வாழ்நாளில் மிக முக்கியமான நிலையில் எங்களுக்கு அளப்பரிய உதவியைச் செய்தமைக்காக சிரந்தாழ்த்தி வணங்குகிறோம். எங்களது நன்றிகளை, எங்களது குடும்பத்தாரின் சார்பாக சகலருக்கும் அறியத்தருகிறோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரிகைகள், கல்வெட்டு வாசித்தல் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி 13-05-2023 சனிக்கிழமை அன்று #3840 finch Ave east எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
யமனுக்கு 'யமதர்மராஜன்' என்ற நாமகரணம் வியப்பளிக்கும் ஒன்று. அறிவுத்திறன் விஞ்சி நின்ற மகன் பாஸ்கரனுக்கு தன் வலையை முதலில் வீசி, 28 நாட்களின்பின் அதே வலையைத் தாய்க்கு வீசிய கொடூரத்தை என்சொல்வது? தர்ம...