Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 JUN 1944
மறைவு 27 JUN 2019
அமரர் இராஜேஸ்வரி தங்கத்துரை 1944 - 2019 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வடமராட்சி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மற்றும் திருகோணமலை லிங்கநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தங்கத்துரை அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கத்துரை(இ.போ.சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

சேசவன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் கட்டடங்கள் திணைக்களம்- திருகோணமலை), Dr. சபேசன்(பல்வைத்திய நிபுணர் - கனடா), வாசீகன்(ஆசிரியர்- புனித சூசையப்பர் கல்லூரி திருகோணமலை), ஆனந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வனிதை, வத்சலா(கனடா), Dr. நிகேதா(அயுள்வேத வைத்தியசாலை- நகராட்சி மன்றம் திருகோணமலை), முரளிதரன்(பொறியிலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அபிநயன், அக்சயன், காருண், ஓவியா, கவின், வியாசன், வைஷாலி, ஹரிஸ், ஹரிணி, சேரன், நரேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.30 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்