யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரா இராஜநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா..!
உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!
உங்களையே நினைக்கின்றேன்
உங்களுக்காக வாழ்கின்றேன்
கண்ணீரில் கரைகின்றேன்
கண்ணுறங்க மறக்கின்றேன்
என்னையேன் நீங்கள் மறந்தாய்
உன் நினைவை ஏன் துறந்தாய்
தூரத்து நிலவாக தொலைந்து ஏன் போனீர்கள்!
ஆண்டுகள் பத்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எங்கள் மனதில்
அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எங்கள் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!