கொழும்பைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரன் ரபீந்திரன் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன், பாலாமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற இராயப்பு, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிகா(இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுனா, மிதோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன்தாஸ்(அவுஸ்திரேலியா), ரமேஷ்(இந்தியா), மதுபாலா, ஷைலா, ரோஷன், காலஞ்சென்ற முரளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரெகானா, ராஜேஷ், பிரேம்குமார், லலிதா, குமாரி ஆகியோரின் அன்பு மச்சானும்,
ராணி ஸ்ரிபன்(யாழ்ப்பாணம்), அஞ்சலா மெய்யநாதன்(Hatton), சாந்தி கண்ணன்(கனடா), பீலிக்ஸ் கெங்கா(இத்தாலி), அம்புறோஸ் தயா(சுவிஸ்), பிபியா துரைச்செல்வம்(கொழும்பு), அன்ரன் சமிளா(பிரான்ஸ்), லொறற்றா சிக்கோ(இத்தாலி), காமலீற்றா பாப்பி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-05-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.