Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 27 JUL 1941
விண்ணில் 16 APR 2022
கலாநிதி இராஜதுரை மதனாகரன்
முன்னாள் புவியற்றுறைப் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணக் கல்லூரி- வட்டுக்கோட்டை
வயது 80
கலாநிதி இராஜதுரை மதனாகரன் 1941 - 2022 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை மதனாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இவர் 16-04-2022 சனிக்கிழமை அன்று கனடா ரொறன்ரோவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை, மனோன்மணி இணையரின் மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், தினகரன், காலஞ்சென்ற பிரபாகரன், பாஸ்கரன், அம்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாபரன், அஜந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனிபர் அவர்களின் அன்பு மாமனாரும்,

சஞ்சே, பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் அவரது விருப்பப்படியே அவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றன.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு அவரது உறவினர்கள், நண்பர்கள், அன்பு மாணவர்கள், மற்றும் இந்தத் துக்கச் செய்தியை அறிந்து நேரிலும், தொலை பேசி ஊடாகவும் ஆறுதல் கூறியவர்கள் அனைவரையும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: பாலேஸ்வரி மதனாகரன்

Photos

No Photos

Notices