Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1937
இறப்பு 06 APR 2020
அமரர் ராஜாத்தி நடராஜா
வயது 82
அமரர் ராஜாத்தி நடராஜா 1937 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 85 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்,  லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜாத்தி நடராஜா அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், ராஜிவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற மயில்வாகனன், பார்வதி  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜினி, மகிழ்தினி, ரோகினி, அஞ்சனா(Lawyer) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீதரன், விக்னேஸ்வரன், யோகேந்திரன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி, வாகீஸ்வரன்(சிட்னி),  சாரதாதேவி(லண்டன்), காலஞ்சென்ற சிவராஜகுலேந்திரன், செல்வச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைறட்ணம், ஜானலஷ்மி மற்றும் சங்கரலிங்கம்(லண்டன்), பத்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, தீபலஷ்மி(Doctor), துவாரகா, ராதாகௌரி(Doctor), வெங்கடேஸ்வரன், திவ்வியா, கணேஸ்வரன், சரண்ணியன், அபிசேக், கபிலன்(Doctor) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

நராயண், நதினா, ஆஞ்சய், அமிலா ஆகியோரின் அன்பு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண நிலை காரணத்தால் நெருங்கிய உறவுகள் மட்டுமே அன்னாரின் ஈமக்கிரியைகளில் பங்கேற்கின்றனர்.

எங்கள் அருமை அம்மாவே
எம்மை விட்டு எங்கு சென்றீர்களோ ???
எங்களை விட்டு பிரிய உங்களுக்கு
என்றும் மனம் வராதே!!!
உற்ற துணையாக இருந்த எங்கள் தாயே
எங்கள் இதய தெய்வமாய்
எப்பொழுதும் நீங்கள்
எண்ணிப் பார்க்கையில் 
கண்ணீர் மல்க கலங்கி நிர்க்கின்றோம்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!!!
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழி நடத்திய நீங்கள் 
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

உலகின் பல பாகங்களிலுமிருந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும்மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices