Clicky

பிறப்பு 31 AUG 1964
இறப்பு 18 AUG 2020
அமரர் இராஜசிங்கம் கெங்காதரன் (கெங்கா)
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர், Dutch flowers Ltd, Tamil wedding London Proprietor
வயது 55
அமரர் இராஜசிங்கம் கெங்காதரன் 1964 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Indran & Vasanthy 25 AUG 2020 United Kingdom

அத்தியடியில் உருவாகி நெதர்லாந்து வழியாக தேம்ஸ் நதி தேடி வந்த கெங்காவே எங்கு சென்றாய்? சிங்கம் போல் வாழ்ந்த ராஐசிங்கத்தின் ராஜாவே மலர் அவள் உனைப் பெற்றதனால் மலர்க்கடை வைக்கும் அவாக் கொண்டாயோ? உன் அழகி நிரஜாவை விட்டுப் போக உனக்கு எப்படி துணிவு வந்தது? அன்பு மகன் வெங்கட் வெம்பி வெம்பி அழுவது உனக்குக் கேட்கலையா? மங்கல விழாக்களுக்கு மாலைகள் சூட்டி மகிழ்ந்திருந்தாய் அமங்கல நிகழ்வுகளுக்கு மலர் மாலைகள் குவித்து அஞ்சலித்தாய் இன்றுனக்கு மலரஞ்சலியா? ஏற்குதில்லை! இது நிஜம் என்று எம் மனம் ஏற்குதில்லை சருகாகும் முன்னே மணம் மாறாது மறைந்தாயே போய் வாருமய்யா! இந்திரன் வசந்தி குடும்பம்