

யாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், கனகபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட இராஜசேகரம் இராஜேந்திரம் அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசேகரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா(பொலிஸ்) பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாநிதி(ஜெர்மனி), உமாநிதி(பிரான்ஸ்), விஜியாநிதி(ஆசிரியை- கிளி/மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசுநாயனார், பாக்கியம், தினகரநாதன், விக்னேஸ்வரமூர்த்தி, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணகுமார்(ஜெர்மனி), வரதராஜா(பிரான்ஸ்), செல்வானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனாத்தனா, சகானா, தேனுஜன்(ஜெர்மனி), கிஷாந்தி, சுகிதா, ரதன், விதுலா(பிரான்ஸ்), தருண், மதுஜன், சஸ்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு:ப 09.00 மணியளவில் கனகபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.