யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய இடங்களைவதிவிடமாகவும் கொண்ட அமரர் இராசரட்ணம் வசந்தலாராணி எனும் அன்புத் தெய்வத்தின்அந்தியேட்டியும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், நன்றி நவிலும்.
அன்பின் திருவுருவாய், பாசமிகு மகளாய், சகோதரியாய், மனைவியாய், மைத்துனியாய், தாயாய், மாமியாய், பேர்த்தியாய் வாழ்ந்த தெய்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அவர்தம் ஆத்மசாந்திக்காக ஆண்டவன் திருவடியை கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து கசிந்துருகிப் பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் அம்மாவின் துயரச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவுவகைகளை தந்துதவியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய
அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக
வீட்டுக்கிரியை அழைப்பிதழ்
அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அச்சுவேலியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து, அன்று இடம்பெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.